கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தேசிய கால்நடை தடுப்பூசி

தேசிய கால்நடை தடுப்பூசி திட்டம் 2025-26 ன் கீழ் கோமாரி நோய் தடுப்பூசி 7 வது சுற்று பணி , சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது
பெரம்பலூர் வட்டம் செங்குணம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலக வளாகத்தில் 11-07-2025 இன்று தமிழ்நாடு அரசின் பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தேசிய கால்நடை தடுப்பூசி திட்டம் 2025-26 ன் கீழ் கோமாரி நோய் தடுப்பூசி 7 வது சுற்று பணி , சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது. இதில் கால்நடை மருத்துவ குழுவினர் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்துதல், சினை பரிசோதனை செய்தல், மாடுகளுக்கு சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டனர். கால்நடை வளர்போர் பலரும் பங்கேற்று பயனடைந்தனர்.
Next Story