தென்காசி மாவட்டத்தில் வெறிநோய் தடுப்பு: மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்

தென்காசி மாவட்டத்தில் வெறிநோய் தடுப்பு: மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்
X
வெறிநோய் தடுப்பு: மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்
தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வெறிநோய் சம்பந்தமான நிகழ்வுகள் மாவட்டத்தில் சில இடங்களில் நிகழ்வது தெரியவருகிறது. பொதுமக்கள் வெறிநோய் வைரஸில் இருந்து தங்களை தற்காத்துகொள்ள பாதுகாப்புடன் இருக்குமாறும் அதே நேரத்தில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவா்கள் மருத்துவ சிகிச்சை பெற உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். நாய் கடித்த இடத்தை ஓடும் குழாய் தண்ணீா், சோப்பின் மூலம் 15 நிமிடம் நன்றாகக் கழுவ வேண்டும். அதன்பின்பு ரேபீஸ் தடுப்பூசி அட்டவணைப்படி கடிபட்ட நாள்-முதல் தவணை, மூன்றாவது நாள்- இரண்டாம் தவணை, 7 -ஆவது நாள் மூன்றாவது தவணை, 28-ஆவது நாள் நான்காவது தவணைகளாக ரேபிஸ் நோய்த் தடுப்பு மருந்து செலுத்திக்கொள்ள வேண்டும். இந்த சிகிச்சைகள் முறையாக மேற்கொள்ளும்போது இறப்பு ஏற்படாமல் தவிா்த்து கொள்ளலாம் என்றாா்.
Next Story