சீரான குடிநீர் விநியோகம் : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

சீரான குடிநீர் விநியோகம் : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
X
தூத்துக்குடி மாநகராட்சியில் சீரான குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் சீரான குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். பின்னர் அவர் தெரிவிக்கையில், "தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சீரான குடிநீர் வழங்குவதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக ராஜாஜி பூங்கா மற்றும் லெவிஞ்சிபுரம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு வருகின்ற நீரின் அளவையும் மாநகரப் பகுதிகளுக்கு வழங்கப்படும் நீரின் அளவையும் பார்வையிட்டு ஆய்வு செய்தேன். மேலும் மாநகர மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தவும் சில பகுதிகளில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு அந்தப் பகுதிகளிலும் சீரான குடிநீர் வழங்கப்படும் என்று தெரிவித்தார். ஆய்வின்போது, பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார் உடனிருந்தார்.
Next Story