கெலமங்கலம் வட்டார வேளாண்மை அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

கெலமங்கலம் வட்டார வேளாண்மை அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
X
கெலமங்கலம் வட்டார வேளாண்மை அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் வட்டார வேளாண்மை அலுவலகத்தில் அட்மா திட்டம் சார்பில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்துக்கொள்ள விவசாயிகள் வந்தனர். ஆனால் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப அலுவலர்கள் விவசாயிகளை அனுமதிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த விவசாயிகள் வேளாண்மை அலுவலகம் முன்பு அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு கணேஷ் ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் விவசாயிகள் அட்மா திட்ட பணியாளர்களை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
Next Story