புலிப்பாக்கம் கோவிலில் தேர் திருவிழா விமரிசை

X
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா, புலிப்பாக்கம் கிராமத்தில், பொன்னியம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலில், நடப்பாண்டிற்கான ஆனி மாத தேர்த் திருவிழா, கடந்த 1ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம், காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பிற்பகல் 12:00 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்வு நடந்தது. இதையடுத்து, இரவு 11:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினார். பின், அலங்கரிக்கப்பட்ட தேரை பக்தர்கள் வடம் பிடித்து, வீதிகளில் இழுத்து சென்றனர்.
Next Story

