பூதப்பாண்டியில் உழவர் நலத்துறை திட்டம்

பூதப்பாண்டியில்  உழவர் நலத்துறை திட்டம்
X
உழவரை தேடி
குமரி மாவட்டம் தோவாளை வட்டாரத்தில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம் நிகழ்ச்சி பூதப்பான்டி ஒருங்கிணைந்த வேளான்மை விரிவாக்க மைய கூட்ட அரங்கில் வைத்து நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் சுரேஷ் தலைமை தாங்கி தற்போது விவசாயிகள் கடை பிடிக்க வேண்டிய நெல் உர மேலாண்மை வேளான் தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்தார். வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் நஸ்ரின் மண் வள அட்டையின் முக்கியத்துவம் பற்றியும் ஆய்வுக்கு மண் எடுப்பது பற்றியும் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் பற்றியும் விளக்கினார். வேளான் பொறியியல் துறை சார்ந்த டெனிஷா உதவி பொறியாளர் வேளாண் உபகரணங்களை பற்றியும், உதவி இயக்குநர் விமலா, வேளாண் வணிகம் வேளாண் சார்ந்த விளை பொருட்களை சந்தைப்படுத்துதல் பற்றியும் வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ் பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் பற்றியும் நெல் பயிர் காப்பீடு பற்றியும் மற்றும் வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை பற்றி எடுத்துக் கூறினார்கள் .
Next Story