மத்திய வேளாண் கருத்தரங்கில் தமிழ்நாடு அமைச்சர் பங்கேற்காதது குறித்து விளக்கம் – சிவராஜ் சிங் சவுகான்

மத்திய வேளாண் கருத்தரங்கில் தமிழ்நாடு அமைச்சர் பங்கேற்காதது குறித்து விளக்கம் – சிவராஜ் சிங் சவுகான்
X
கோவை பி.என்.புதூரில் உள்ள மத்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் இன்று பருத்தி உற்பத்தி பெருக்கம் குறித்த கருத்தரங்கம் மற்றும் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை பி.என்.புதூரில் உள்ள மத்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் இன்று பருத்தி உற்பத்தி பெருக்கம் குறித்த கருத்தரங்கம் மற்றும் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், ஜவுளி துறை அமைச்சர் கிரிராஜ் சிங், ஹரியானா வேளாண் துறை அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விவசாயிகளின் கோரிக்கைகள் பெறப்பட்ட நிலையில், பருத்தி உற்பத்தியை உயர்த்த புதிய ரகங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். தமிழ்நாட்டுக்கான பஞ்சு கொள்முதல் தாமதம் குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், செஸ் வரி விலக்கு வழங்கப்பட்டாலும், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயத்திற்கு பிறகு மட்டுமே அமலுக்கு வரும் என்றும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். வனவிலங்கு சேதம், சிபில் ஸ்கோர் பிரச்சனை ஆகியவை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவை எனவும், மத்திய அரசு ஒத்துழைக்கும் என்றும் தெரிவித்தார். நிகழ்ச்சிக்கு அனைத்து மாநில வேளாண் அமைச்சர்களும் அழைக்கப்பட்டதாகவும், தமிழ்நாடு அமைச்சர் பங்கேற்காததற்கு அவரிடமே கேட்க வேண்டும் எனவும் தெரிவித்தார். விவசாய உற்பத்தி மேம்பாட்டிற்காக மேலும் ஆய்வகங்கள் அமைக்கும் திட்டம் மத்திய அரசிடம் இருப்பதாகவும் கூறினார்.
Next Story