தூய்மை பணியாளருக்கு சீருடை

X
ஈரோடு மாநகராட்சி 1ம் மண்டலத்தில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது. ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் உள்ள 60 வார்டுகளிலும் சிறப்பு தூய்மை பணி(மாஸ் கிளீனிங்) பணி நடந்து வருகிறது. இதில், 1வது மண்டலத்திற்கு உட்பட்ட சின்னப்பா லே அவுட்டில் மாஸ் கிளீனிங் பணி நேற்று நடைபெற்றது. இந்த பணிகளை மாநகராட்சி துணை ஆணையர் தனலட்சுமி தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக 1ம் மண்டல தலைவர் பி.கே.பழனிசாமி பங்கேற்று, மாஸ் கிளீனிங்கில் ஈடுபட்ட 50 தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகளை வழங்கினார். நிகழ்ச்சியில், மாநகராட்சி செயற்பொறியாளர் பிச்சமுத்து, சுகாதார அலுவலர் தங்கராஜ், சுகாதார ஆய்வாளர் சதீஸ், இளநிலை பொறியாளர்கள் திருமூர்த்தி, சுவரன் சிங் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

