ராஜபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டிடபணிகள் நிறைவு! முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைப்பு!

X
ராஜபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டிடபணிகள் நிறைவு! முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைப்பு! விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில்வே பிட்டர் சாலை பகுதியில் செயல்பட்டு வரும் சேத்தூர் சேவுக பாண்டியன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் ரூ.85.44 லட்சம் மதிப்பீட்டில் சுகாதாரமான சூழலில் நான்கு புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்காக ஒப்படைக்கப்பட்டது. புதிய வகுப்பறைக் கட்டிடங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தங்கபாண்டியன் தலைமையில், நகர் மன்றத் தலைவி பவித்ரா ஷியாம் முன்னிலையில் பள்ளி மாணவர்களே ரிப்பன் வெட்டி புதிய பள்ளி வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தனர். இந்த விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், திமுக நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
Next Story

