வட மாநில வாலிபர் கைது

வட மாநில வாலிபர் கைது
X
கஞ்சா விற்ற வாலிபர் கைது
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தாலுகா அலுவலகம் பகுதியில் மதுவிலக்கு போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த வடமாநில வாலிபரை பிடித்து போலீசார் சோதனை நடத்தினர். இதில், அந்த நபர் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் ஒடிசா மாநிலம் சுபமாபூரை சேர்ந்த ரின்கூ பகர்டி (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
Next Story