பருத்தி உற்பத்தி மேம்பாடு குறித்த கருத்தரங்கில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு !

மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில், பருத்தி உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் பங்குதாரர்களுடன் கலந்தாய்வு நிகழ்ச்சி கோயம்புத்தூரில் உள்ள கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தில் நடைபெற்றது.
மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில், பருத்தி உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் பங்குதாரர்களுடன் கலந்தாய்வு நிகழ்ச்சி கோயம்புத்தூரில் உள்ள கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். துவக்க நிகழ்வாக, பருத்தி சாகுபடி நிலத்தில் மரக்கன்றுகள் நட்டமையுடன், டிரோன் மூலமாக பூச்சி மருந்து தெளிக்கும் தொழில்நுட்பம் உள்ளிட்ட கருவிகள் குறித்த ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. பின், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுடன் அமைச்சர்கள் கலந்துரையாடி, விவசாயிகளின் சவால்கள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தனர். மாலை நடைபெற்ற கருத்தரங்கில் விவசாய சங்கங்கள், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சரஸ்வதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மத்திய அமைச்சர்கள், விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து, பத்திரிகையாளர்களிடம் விளக்கமளித்தனர்.
Next Story