கோவை: மீனவர்களுக்கு மானியத்தில் பரிசல் - கோவை மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை: மீனவர்களுக்கு மானியத்தில் பரிசல் - கோவை மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
X
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 15 மீனவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பவன்குமார் பரிசல்கள் வழங்கினார்.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், உள்நாட்டு மீனவர்களுக்கு 50% மானியத்தில் மீன்பிடி பரிசல்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 15 மீனவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பவன்குமார் நேற்று பரிசல்கள் வழங்கினார். ஒவ்வொரு பரிசலின் விலை ரூ.18,500 ஆகும். இதில் ரூ.9,250 துறை சார்பாக மானியமாக வழங்கப்பட்டு, மீதமுள்ள தொகையை மீனவர்கள் செலுத்தினர். சிறுமுகை, மேட்டுப்பாளையம், கோவை வட்ட மீனவர் சங்கங்களைச் சேர்ந்த மீனவர்கள் பயனடைந்தனர்.
Next Story