நீர்நிலை புறம்போக்குகளில் கட்டப்பட்டுள்ள ஏழை எளிய மக்களின் வீடுகளை இடித்து அப்புறப்படுத்துவதை கண்டித்து கண்டன போராட்டம் சிபிஎம் கட்சி கூட்டத்தில் முடிவு

நீர்நிலை புறம்போக்குகளில் கட்டப்பட்டுள்ள ஏழை எளிய மக்களின் வீடுகளை இடித்து அப்புறப்படுத்துவதை கண்டித்து கண்டன போராட்டம்  சிபிஎம் கட்சி கூட்டத்தில் முடிவு
X
நீர்நிலை புறம்போக்குகளில் கட்டப்பட்டுள்ள ஏழை எளிய மக்களின் வீடுகளை இடித்து அப்புறப்படுத்துவதை கண்டித்து மிகப்பெரிய அளவில் கண்டன போராட்டம் நடத்துவதென அரியலூர் மாவட்ட மாவட்டக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
அரியலூர், ஜூலை.12- நீர்நிலை புறம்போக்குகளில் கட்டப்பட்டுள்ள ஏழை எளிய மக்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடித்து அப்புறப்படுத்துவதை கண்டித்து  ஒட்டுமொத்த ஏழை எளிய மக்களை ஒன்று திரட்டி மிகப் பெரிய அளவில் கண்டன போராட்டம் நடத்துவதென சிபிஎம் கட்சி அரியலூர் மாவட்டக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரியலூர் மாவட்டக் குழு கூட்டம்  கட்சி மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.துரைசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில்  மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி நீர்நிலை புறம்போக்குகளில் கட்டப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களின் வீடுகளை மாவட்ட நிர்வாகம் மாவட்ட காவல் துறையின் உதவியோடு, மாவட்ட வருவாய்த்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் புல்டோசர் மூலம் ஏழை எளிய மக்களின் குடிசை வீடுகளை இடித்து அப்புறப்படுத்துவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு வன்மையாக கண்டிக்கிறது. மேலும் பல்வேறு இடங்களில் வீடுகளை இடித்த போது தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நேரடியாக களத்திற்கு சென்று தடுத்தும் அதற்காக போராட்டத்தையும் நடத்தியுள்ளது. தொடர்ந்து இடிக்கும் போக்கு தொடருமேயானால் மாவட்டம் தழுவிய அளவில் ஏழை, எளிய மக்களின் வீடுகளை இடிப்பதற்கு எதிராக கண்டன போராட்டத்தை பெரும் திரளாக மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் கண்டன போராட்டத்தை நடத்துவது, அரியலூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன நடைபயண பிரச்சார இயக்கத்தின் போது உழைப்பாளி மக்கள்ளிடம் இருந்து பெறப்பட்ட இலவச வீட்டு மனை பட்டா, குடிமனை பட்டாவுக்கான மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் கொடுப்பது, பட்டா வழங்குவதற்கான காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவது, அரியலூர் நகராட்சிக்கு பின்புறம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சொந்தமான இடம் மற்றும் 70-க்கும் மேற்பட்ட மக்களுக்கான இடம் உள்ளது. இதற்கு செல்லக்கூடிய பாதையை காவல்துறை மூலம் ஆக்கிரப்பு செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பை அகற்றி பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என சிபிஎம் கட்சியின் கந்தர்வகோட்டை எம்எல்ஏ எம்.சின்னதுரை, கீழ்வேளூர் எம்எல்ஏ நாகை மாலி  ஆகியோர் தலைமையில்  மூன்று கட்டமான போராட்டங்களை தொடர்ந்து நடத்தியும், பலமுறை மாவட்ட ஆட்சியர் நிர்வாகத்தோடு பேசப்பட்டும் பாதைதராத    மாவட்ட ஆட்சியர் நிர்வாகத்திற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தமிழ் மாநில குழு செயலாளர் பெ..சண்முகம் தலைமையில் விரைவில் போராட்டம் நடத்தப்படவுள்ளது. கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு 100 நாள்வேலை திட்டத்தில் பணியாற்றி வரும் அனைவருக்கும் கிராமப்புற ஊராட்சிகளில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை தொடர்ந்து அமல்படுத்துவது கூலி பாக்கி தொகையை உடனடியாக வழங்க வேண்டும்  என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.          கூட்டத்தில் தமிழ் மாநில குழு உறுப்பினர் ஐ வி நாகராஜன் அவர்கள் கலந்துகொண்டு மாவட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் இடைக் கமிட்டி செயலாளர்களுக்கு மத்தியக்குழு , மாநிலக் குழு முடிவுகளை விளக்கி பேசினார். இதில் மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன் நடைபெற்ற பணிகள் குறித்து முன்மொழிந்து பேசினார் இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மணிவேல், எ.கந்தசாமி, எம்.வெங்கடாசலம், கே.கிருஷ்ணன், டி.அம்பிகா, வி.பரமசிவம் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் அனைத்து இடைக்கமிட்டிகளிலும் சந்தா சேகரிப்பு இயக்கத்தை தொடங்கி மாவட்டம் முழுவதும் தீக்கதிர் நாளிதழை கொண்டு சேர்க்க வேண்டுமென தமிழ் மாநில குழு உறுப்பினர் ஐ வி நாகராஜன் அவர்கள் மாவட்ட குழு உறுப்பினர்கள் இடைக்கமிட்டி செயலாளர்களிடம் வலியுறுத்தி பே.சினார்.
Next Story