கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின்சார உற்பத்தி நிலவரம்

X
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1000 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய (ஜூலை 12) நிலவரப்படி 2 அணு உலைகளிலும் மொத்தம் 1912 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகியுள்ளது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது. இரு அணு உலைகளில் இருந்து தலா 562 மெகாவாட் வீதம் தமிழகத்திற்கு 1124 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது.
Next Story

