டைட்டானிக் பொருட்காட்சியை திறந்து வைத்த மேயர்

X
திண்டுக்கல்லில் வத்தலகுண்டு பைபாஸ் ரோடு கருப்பண்ணசாமி கோவில் அருகில் டைட்டானிக் பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 11.07.25 முதல் 07.09.25 வரை பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இப்பொருட்காட்சியில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை கண்டுகளிக்கும் வகையில் டைட்டானிக் கப்பலை போன்ற மாதிரியை அப்படியே வடிவமைத்துள்ளனர். மேலும் ஜெயண்ட் வீல் ராட்டினங்கள், டைட்டானிக் கப்பல், ராட்டினம் பிரேக் டான்ஸ், கொலம்பஸ், பேய் வீடு, மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், சிறப்பான ஸ்டால்கள், நாவில் ருசி வரும் உணவுகள் நவரசத்துடன், வைக்கப்பட்டுள்ளது. அழகு சாதனப்பொருட்கள் மற்றும் அரங்குகள் அமைந்துள்ளன. குழந்தைகள் விரும்பும் வகையில் டோரா டோரா, பால் பைட் கேம்ஸ், ட்ராகன் டிரைன், படகு சவாரி, ஜம்பிங் கேம்ஸ், குழந்தைகள் ஓட்டும் கார், பைக் சவாரி மற்றும் பல பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளது. மேலும் பொருட்காட்சி அரங்கத்தில் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ள டைட்டானிக் கப்பல் ஆகியவற்றை கண்டுகளித்து பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Next Story

