தூத்துக்குடியில் ஆட்டோ மோதி ரயில்வே கேட் சேதம் - ரயில்கள் தாமதம்!

தூத்துக்குடியில் ஆட்டோ மோதி ரயில்வே கேட் சேதம் - ரயில்கள் தாமதம்!
X
தூத்துக்குடியில் 1வது ரயில்வே ரயில்வே கேட் மூடப்பட்டபோது, கேட்டை உடைத்துக் கொண்டு ஒரு ஆட்டோ சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடியில் 1வது ரயில்வே ரயில்வே கேட் மூடப்பட்டபோது, கேட்டை உடைத்துக் கொண்டு ஒரு ஆட்டோ சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடியில் மணியாச்சி செல்லும் பயணிகள் ரயில் நேற்று இரவு 10.35க்கு புறப்பட்டது. இதன் காரணமாக 1வது ரயில்வே கேட் மூடப்பட்டது. அப்போது அவ்வழியே வந்த ஒரு ஆட்டோ கேட்டை உடைத்துக் கொண்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதனால் கேட்டின் பூம் உடைந்து சேதம் ஆனது. இந்த சம்பவம் எதிரொலியாக இரவு 10.35 மணிக்கு புறப்பட வேண்டிய தூத்துக்குடி - மணியாச்சி பாசஞ்சர் சுமார் 24 நிமிடங்கள் தாமதமாக 10.59 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. 10.50 மணிக்கு புறப்பட வேண்டிய தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் ஒரு மணி 10 நிமிடம் தாமதமாக 12.00 மணிக்கு புறப்பட்டு சென்றது. ரயில்கள் தாமதமானதால் பயணிகள் அவதியடைந்தனர். மேலும், உடைந்த கேட்டை ரயில்வே ஊழியர்கள் சரி செய்து வருகின்றனர். சம்பவ இடத்தில் தூத்துக்குடி ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் பிரவீன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். ரயில்வே கேட் மீது மோதிய வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story