சிவன்மலையில் நாளை ரேக்ளா பந்தயத்திற்கான கால்கோள் விழா

சிவன்மலையில் நாளை ரேக்ளா பந்தயத்திற்கான கால்கோள் விழா
X
சிவன்மலையில் நாளை நடைபெறும் ரேக்ளா பந்தயத்திற்கான கால்கோள் விழா
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சிவன்மலையில் நாளை ரேக்ளா பந்தயம் நடக்கிறது. நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மலையை சுற்றி கிரிவலப்பாதையில் 200 மீட்டர், 300 மீட் டர் தூரம் பந்தயம் நடக்க உள்ளது. இதற்காக கிரிவலப் பாதையில் கால்கோள் பூஜை நடைபெற்றது. பூஜைக்கு காங்கேயம் நகர்மன்ற தலைவர் மற்றும் தி.மு.க. நகர இளைஞரணி அமைப்பாளர் ந. சூர்யபிரகாஷ் தலைமை தாங்கினார். காங்கேயம் நகர செயலாளர் வசந்தம் நா. சேமலையப்பன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.கே. கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர்கள் சிவானந்தன், கருணைபிரகாஷ், முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் மகேஷ்குமார், திமுக முன்னாள் நகரச் செயலாளர் மணிவண்ணன், சிவன்மலை ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் சண்முகம், ஆயக்காடு செந்தில், தகவல் தொழில்நுட்ப அணி செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story