சூலூரில் தென்னிந்திய அளவிலான ஆமச்சூர் பெண்கள் கபடி போட்டி - லீமா ரோஸ் மார்ட்டின் துவக்கி வைப்பு

சூலூரில், பெண்களுக்கான தென்னிந்திய அளவிலான கபடி போட்டி சிறப்பாக நடைபெற்றது.
சூலூரில், பெண்களுக்கான தென்னிந்திய அளவிலான ஆமச்சூர் கபடி போட்டி சிறப்பாக நடைபெற்றது. தமிழக அமெச்சூர் கபடி கழகம் மற்றும் கோவை Best&Co நிறுவனத்தின் 25வது ஆண்டு விழாவை முன்னிட்டு, இந்த போட்டி நடத்தப்பட்டது. போட்டியை Best&Co தலைவர் லீமா ரோஸ் மார்ட்டின் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவர் தேவி மன்னவன், தெற்கு ஒன்றிய செயலாளர் மன்னவன், சர்வதேச நடுவர் கோபால், தேர்வுக் குழு உறுப்பினர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பேசிய லீமா ரோஸ், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், மன உறுதியை வளர்க்க விளையாட்டுப் போட்டிகளில் அவர்களது பங்கேற்பு முக்கியம் என்றார். சூலூர் பேரூராட்சித் தலைவர் தேவி மன்னவன் பேசும்போது பெண்கள் மேம்பாட்டில் சூலூர் முன்னோடியாக இருப்பதாகவும், மேலும் இவ்வாறான போட்டிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் கூறினார்.
Next Story