மதுரை ரவுடி வத்தலகுண்டுவில் கழுத்தறுத்து கொலை

X
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்தவர் செல்வம் மகன் சிவமணி (27) சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது மதுரை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளது. ரவுடி சிவமணியை தீர்த்துக்கட்ட முடிவு செய்து, ரவுடி சிவமணியிடம் நைசாக பேசி கொடைக்கானல் சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளனர். இதன்படி இவரது நண்பர்களும் கூட்டாளிகளுமான 5 பேர், கொடைக்கானல் சுற்றுலா சென்றுள்ளனர். மது போதையில் இருந்த சிவமணியை காருக்குள் வைத்து, கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து, அவரது உடலை வத்தலகுண்டு எழில் நகரில் சாலையில் வீசி உள்ளனர். கொலை செய்யப்பட்ட பிறகும் ஆத்திரம் அடங்காமல் சிவமணி முகத்தில் கல்லை தூக்கி போட்டு முகத்தை சிதைத்து விட்டு கொலையாளிகள் அங்கிருந்து ஐந்து பேர் தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற, சப்-இன்ஸ்பெக்டர் ஷேக்அப்துல்லா தலைமையிலான காவல்துறையினர் பிரபல ரவுடி ஜெய்ஹிந்த்புரம் சிவமணி உடலை கைப்பற்றி பிரரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வத்தலகுண்டு காவல்துறையினர், சிவமணியை கொலை செய்த ரவுடிகளும் அவரது நண்பருளுமான 5 பேரை, தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் வத்தலகுண்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story

