கோவை: அண்ணா மார்க்கெட் வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டம் !

அண்ணா மார்க்கெட்டில், புதிய கடைகள் கட்டப்படாத நிலையில், வாடகை உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை சாய்பாபா காலனியில் உள்ள அண்ணா மார்க்கெட்டில், புதிய கடைகள் கட்டப்படாத நிலையில், வாடகை உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி நிர்வாகம், பழைய கடைகளை காலி செய்ய உத்தரவிட்டதும், புதியதாக வெறும் 80 கடைகளே கட்டப்பட்டதையும் வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். முழு புனரமைப்பு இல்லாமல், வாடகையை ரூ.10 லிருந்து ரூ.150-ஆக உயர்த்தியது அவலமானது என்றும், புதிய கடைகள் வழங்கப்படும் வரை புதிய வாடகையை ஏற்க முடியாது என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
Next Story