கோவை: மங்கி குல்லா அணிந்து ஆசாமி கொள்ளை - சி.சி.டி.வி காட்சிகள் அதிர்ச்சி!

X
கோவையில் தற்போது டிப் டாப் உடையுடன், மங்கி குல்லா அணிந்த கொள்ளையன் வீடுகளில் நோட்டமிட்டு நகை, பணம் திருடும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கோவைப்புதூர் பகுதியில் உள்ள சாமுவேல் என்பவரின் வீட்டிலிருந்து 34000 ரூபாய் ரொக்கம் மற்றும் 10 பவுன் நகை கொள்ளை செய்யப்பட்டது. அதேபோல் அருகிலுள்ள ஐந்து வீடுகளிலும் இவ்விதமாக கொள்ளை நடைபெற்றுள்ளது. சி.சி.டி.வி காட்சிகளில், சந்தேகத்திற்கிடமான நபர் டிப் டாப் உடையுடன், மங்கி குல்லா அணிந்து வீடுகளை நோட்டமிட்டு உள்ளே புகும் காட்சிகள் பதிவாகியுள்ளது.குனியமுத்தூர் காவல் துறை விசாரணை செய்து வருகிறது. பாதுகாப்பை வலுப்படுத்த, போலீசார் இரவு, பகல் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

