கோவை பேரூரில் கள் விற்பனை – புகைப்படங்கள் வைரல்!
கோவை பேரூர் அருகே காளாம்பாளையத்தில் கள் பாக்கெட்டுகளில் விற்பனை சிறப்பாக நடைபெற்று வருகின்றது. சமூக வலைதளங்களில் அதன் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. தடை செய்யப்பட்ட நிலையில் வார இறுதியில் கள் விற்பனை அதிகரித்துள்ளது. பிளாஸ்டிக் கப்புகளில் ரூபாய் 120க்கு கள் விற்பனை செய்யப்படுகிறது. தோட்டங்களில் குடிக்க வசதியுடன் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளதால், கள் பிரியர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். காவல்துறையின் நடவடிக்கை தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Next Story



