மரணத்தருவாயில் பெண் பேசிய வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பு

மரணத்தருவாயில் பெண் பேசிய வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பு
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே திருமணத்திற்கு மீறிய உறவினால் ஏற்பட்ட விபரீதம் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துக்கொண்ட பெண்.. ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தன்னை இப்படி செய்தவரை வெளியே விடக்கூடாது என மரணத்தருவாயில் பெண் பேசிய வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பு திருப்பத்தூர் மாவட்டம்.. நாட்றம்பள்ளி அடுத்த தோப்பலகுண்டா பகுதியை சேர்ந்தவர் வள்ளிமலர் (31) இவருக்கு சுதாகர் என்பவருடன் திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், சுதாகர் கூலி வேலை செய்து வரும் நிலையில், வள்ளிமலருக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவுக்கார நபரான பிரேம்குமார் என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 29 ஆம் தேதி வள்ளிமலர் வீட்டிற்கு சென்ற பிரேம்குமார், வள்ளிமலர் குடும்பத்தினர் புதியதாக வாங்கிய குளிர்சாதன பெட்டி குறித்து தனக்கு ஏன் கூறவில்லையென வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார், அதற்கு வள்ளிமலர் தன்னுடன் பேசுவதை நிறுத்துமாறு பிரேம்குமாரிடம் தெரிவித்துள்ளார், இதனால் நான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி அது சம்பந்தமான புகைப்படங்களையும் அனுப்பி மிரட்டியும் அவர் சம்மதிக்காத நிலையில்.. ஆத்திரமடைந்த பிரேம்குமார் தன்னுடன் பேசவில்லையென்றால், உன்னை பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிடுவேன் என மிரட்டியுள்ளார், இதனால் ஆத்திரமடைந்த வள்ளிமலர் நானே பெட்ரோல் ஊற்றிக்கொள்கிறேன் எனக்கூறி தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றியுள்ளார், அப்பொழுது எதிர்பாராவிதமாக தீப்பற்றி எரிந்ததில், வள்ளிமலரின் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்ட நிலையில், இதில் அலறிதுடித்த வள்ளிமலரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்., பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வள்ளிமலர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார், பின்னர் வள்ளிமலர், கடந்த 29 ஆம் தேதி எனக்கும் பிரேம்குமாருக்கும் இடையே தகராறு நடந்த போது, நான் பெட்ரோல் என் மீது சிறதளவு தான் தெளித்தேன், எனக்கு எப்படி தீப்பற்றியது என தெரியவில்லை, ஆனால் அங்கிருந்த என்னை பிரேம்குமார் காப்பற்ற முன்வரவில்லை எனது பிள்ளைகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரே என்னை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் எனவும், இதற்கு காரணமான பிரேம்குமாரை பெயிலில் விடக்கூடாது எனவும், தன்னை பிரேம்குமார் மிகவும் கொடுமைபடுத்தியதாகவும் வள்ளி மலர் சிகிச்சையில் இருக்கும் போது அளித்த வீடியோ வாக்குமூலம் அடிப்படையில் பிரேம்குமார் மீது திம்மாம்பேட்டை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.. மேலும் திருமணத்திற்கு மீறிய உறவில் ஏற்பட்ட தகறாரில் இருபிள்ளைகளின் தாய் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் வாக்குமூலம் குறித்த வீடியோ தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story