ஐந்து நிமிடம் கால தாமதமாக வந்ததினால் தேர்வு எழுத முடியாமல் தவித்த மாணவி குமுறல்.!

X
திருப்பத்தூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு மையத்தால் நாற்றம்பள்ளி பகுதியில் எட்டு மையங்கள் அமைக்கப்பட்டு அங்கு 1937 மாணவ மாணவியர் தேர்வு எழுத வந்த நிலையில் உடல் உபாதை காரணமாக ஐந்து நிமிடம் கால தாமதமாக வந்ததினால் தேர்வு எழுத முடியாமல் தவித்த மாணவி குமுறல். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தால் இன்று குரூப் 4 தேர்வு நடைபெற்று வரும் நிலையில்..... திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நான்கு வட்டங்களாக பிரிக்கப்பட்டு நாற்றம்பள்ளி வட்டத்தில் 8 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 1937 மாணவ மாணவியர் குரூப் 4 தேர்வு எழுத வந்திருந்தனர்... அப்போது தேர்வு மையத்திற்குள் 9 மணிக்குள் வரவேண்டும் என்கிற கால அளவில் உட்படுத்தப்பட்ட மாணவ மாணவியர் அனைவரும் உள்ளே சென்று தேர்விற்கு தயாரான நிலையில்.. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அல்லது அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி என்கிற இரு வேறு பள்ளிகளின் அடையாளம் தெரியாமல் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து ஒரு வழியாக நாற்றம் பள்ளி அடுத்த வெளக்கல் நத்தம் பகுதியில் இருந்து போக்குவரத்து வசதி இல்லாமல் தேர்வு மையத்திற்கு வந்து சேர்ந்த மாணவி ஐந்து நிமிட கால தாமதத்தினால் தேர்வு மையத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த அவல நிலை குறித்து அவர் கூறுகையில் போக்குவரத்து வசதி இல்லாத கிராமத்தின் பகுதியில் இருந்து அலைந்து திரிந்து தேர்வு மையத்தை கண்டுபிடிப்பதற்கு நீண்ட நேரம் ஏற்பட்டுவிட்டது உண்மையில் நான் 8.30 மணிக்கு வந்து விட்டேன் ஆனால் மையத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. தற்பொழுது பெண்களுக்கு உரிய இயற்கை உடல் உபாதை காரணமாக என்னால் நிற்கக்கூட முடியவில்லை அவ்வளவு துயரம் இருந்தும் ஒரு ஐந்து நிமிடம் கால தாமதமாக வந்ததினால் நான் மூன்று வருடம் உழைத்த உழைப்பு வீணாய் போய்விட்டது. இதுபோன்ற தேர்வு நடைபெறும் போது குறைந்த அளவு பெண்களுக்கு ஐந்து நிமிடத்திலிருந்து பத்து நிமிடம் வரை கூடுதல் நேரம் கொடுக்க வேண்டும் என்பதை நான் மாநில அரசிற்கும் தேர்வு ஆணையத்திற்கும் கோரிக்கையாக வைக்கின்றேன். என்னை போன்று யாரும் பாதிக்கப்படக் கூடாது என்று குமுறினார். தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் பெண் மாவட்ட ஆட்சியராக இருக்கும் சூழ்நிலையில் இதுபோன்று அரசு பணியாளர் தேர்வுக்கு பெண்ணை அனுமதிக்க முடியாத சூழ்நிலை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story

