வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் இறப்பு

X
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர் கோவில் மலை, நரசிங்கம்பட்டி பெருமாள் மலை, சிவகங்கை ரோட்டில் உள்ள வெள்ளிமலை ஆகிய பகுதிகளில் ஏராளமான புள்ளி மான்கள் வசித்து வருகின்றது. இவை வெயில் காலங்களில் தண்ணீர் தேடியும், உணவு தேடியும் மலையை விட்டு கீழே இறங்குவது வழக்கம். இன்று (ஜூலை.12) அதிகாலை மேலூர் சிவகங்கை ரோட்டில் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் ஒன்று வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியானது.
Next Story

