வாணியம்பாடியில் ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

X
வாணியம்பாடி அருகே ஏரியில் நீச்சல் பழக சென்ற நண்பர்கள் எதிர்பாராவிதமாக சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி பள்ளி மாணவன் மற்றும் இளைஞர் உயிரிழப்பு வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் விசாரணை.. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நேதாஜிநகர் மற்றும் இந்திராநகர் பகுதியை சேர்ந்த நண்பர்கள் 5 பேர் லாலா ஏரி பகுதியில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்றுள்ளனர், அப்பொழுது, எதிர்பாராவிதமாக நித்திஷ் என்ற 6 ஆம் வகுப்பு பள்ளி மாணவனும், தேநீர் கடையில் பணியாற்றும் இர்பான் என்ற இளைஞரும் எதிர்பாராவிதமாக சேற்றில் சிக்கியுள்ளனர், உடனடியாக அவர்களுடன் சென்ற நண்பர்கள் இருவரையும் நீண்ட நேரம் தேடிய நிலையில், இருவரும் கிடைக்காததால், அங்கிருந்து சென்றுள்ளனர், பின்னர் ஏரியில் நீண்ட நேரம் சைக்கிள் மற்றும் செல்போன் இருப்பதை அறிந்த , அங்கு ஆடு மேய்ச்சலில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த நபர் ஏரியில் இருவர் மூழ்கி இருப்பதையறிந்து இதுகுறித்து வாணியம்பாடி கிராமிய போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார், தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாணியம்பாடி தீயணைப்புத்துறையினர் மற்றும் வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் ஏரியில் மூழ்கிய இருவரின் உடலை நீண்ட நேரப்போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்டனர், அதனை தொடர்ந்து காவல்துறையினர் இருவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். சிறுவனின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுத சம்பவம் காண்போர் கண்ணில் கலங்க வைத்தது.. வாணியம்பாடி அருகே நண்பர்களுடன் ஏரியில் நீச்சல் பழக சென்ற பள்ளி மாணவன் மற்றும் இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
Next Story

