பயிர் சாகுபடி பரப்பளவை அதிகரிக்க ஆலோசனை

X
திருப்பூர் மாவட்டத்தில் நெல் 10ஆயிரம் எக்டர் சிறுதானியங்கள், 6ஆயிரம் எக்டர் பயறுவகைகள் 20ஆயிரம் எக்டர் நிலக்கடலை ஆண்டு தோறும் பயிரிடப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டில் சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், விளைச்சலை பெருக்கவும் வேளாண் துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தாராபுரத்தில் பயறு வகை, சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்க ஆலோசனை கூட்டம் வேளாண்மை உதவி இயக்குனர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் பொருட்டு செயல் விளக்கங்கள், புதிய ரகங்களுக்கு உற்பத்தி மற்றும் வினியோக மானியம், நுண்ணூட்டச்சத்து, உயிர் உரங்கள், உயிரியல் காரணிகள், நானோயூரியா, விவசாயிகளுக்கு பயிற்சி, மர வேம்பு பயிர் நடவு ஆகிய இனங்களில் மானிய உதவிகள் வழங்கப்படுகிறது. கூட்டத்தில் தேசிய உணவு பாதுகாப்பு திட்ட ஆலோசகர் அரசப்பன், துணை வேளாண் அலுவலர் செல்லமுத்து மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

