குரு பூர்ணிமா விழா துவக்கம்

குரு பூர்ணிமா விழா துவக்கம்
X
இரணியல்
குமரி மாவட்டம் இரணியல் சாய் நகர் பகுதியில் அமைந்துள்ளது ஷீரடி ஸ்ரீ அனுகிரக சாய்பாபா அன்பாலயத்தில் குரு பூர்ணிமா முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தலைவர் கஸ்தூரிபாய் தலைமையில் கௌரவத் தலைவர் கண்ணன் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு மாநில வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா ஆசியுரை வழங்கினார்கள். இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனர் மருத்துவர் ஜெய. ராஜமூர்த்தி அவர்களுக்கு பூரண கும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் குத்துவிளக்கினை ஏற்றி விழாவை தொடங்கி வைத்து குருநெறியின் தத்துவத்தை விளக்கி சிறப்புரையாற்றினார்கள். சென்னை ஏ டி எம் எஸ் மருத்துவர் பாலச்சந்தர் வாழ்த்துரை வழங்கினார்கள். கன்னியாகுமரி மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) மருத்துவர் ரவிக்குமார், இரணியல் சீரடி சாய்பாபா அன்பாலயம் நிர்வாக இயக்குனர் மருத்துவர் ஜி. கோலப்பன்,மருத்துவர் ரெஞ்சு மற்றும் அறக்கட்டளை நிரந்தர நிறுவன உறுப்பினர்கள், அன்பாலய நிர்வாக குழு உறுப்பினர்கள், மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு குருபூர்ண நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.
Next Story