வனத்துறையை ஊழியரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

வனத்துறையை ஊழியரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
X
பூதப்பாண்டி
குமரி மாவட்டம் கீரிப்பாறையை அடுத்துள்ள வெள்ளாம்பி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீமன் (18). இவர் ஆரல்வாய்மொழி பகுதியிலுள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். சம்பவ தினம் வெள்ளாம்பி பகுதிக்கு வந்து விட்டு திரும்பி செல்லும் சமயம் வனத்துறை ஊழியர்கள் இவர்களை வழிமறித்து தாக்கியதாகவும், சம்பவம் குறித்து கீரிப்பாறை காவல் நிலையத்திலும் வனத்துறை அலுவலகத்திலும் புகார் கொடுத்து இதுவரையிலும் சம்பந்தபட்டவரிடம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை கண்டித்து வெள்ளாம்பி பொதுமக்கள் காலை மறியல் செய்ய வந்தனர். இந்த சம்பவம் கேள்வி பட்டு குலசேகரம் இன்ஸ்பெக்டர் கனகராஜ், அழகிய பாண்டியபுரம் வனச்சரக அலுவலர் கலையரசன் ஆகியோர் சம்பவ இடம் வந்து போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை ஏற்ற பொது மக்கள் அந்த இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Next Story