அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்குவது தொடர்பாக இறுதி முடிவை இந்திய தேர்தல் ஆணையம் எடுக்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா

X
செ.வெ .எண்:612 நாள்:11.07.2025 பத்திரிகைச் செய்தி இந்திய தேர்தல் ஆணையத்தில் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள 2800-க்கும் மேற்பட்டுள்ள அரசியல் கட்சிகள் உள்ளன. அதில் 2019 முதல் கடந்த 6 ஆண்டுகளாக ஒரு தேர்தலிலாவது போட்டியிட வேண்டும் என்ற அத்தியாவசிய நிபந்தனையை நிறைவேற்ற தவறியுள்ள மற்றும் இருப்பிடம் கண்டறிய முடியாத கட்சிகள் என்பதன் காரணமாக பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை (RUPPs) முதற்கட்டமாக பட்டியல் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. 2019-ஆம் ஆண்டிற்கு பிறகு கடந்த ஆறு ஆண்டுகளில் ஒரு தேர்தலில் கூட போட்டியிடாததும் அவற்றின் அலுவலகங்கள் எந்த இடத்திலும் அடையாளம் காணப்படாததும் காரணமாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 345 (RUPPs) இந்திய தேர்தல் ஆணையத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் விருதுநகர் மாவட்டம் மற்றும் வட்டம் மீசலூர் கிராமம் வீரசெல்லையாபுரம் காலணி கதவு எண்.3/172 என்ற முகவரியில் இயங்குவதாக குறிப்பிடப்பட்ட தேச மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அரசியல் கட்சி இப்பட்டியலில் உள்ளது. எந்த கட்சியும் தேவையில்லாமல் பட்டியலிருந்து நீக்கப்படக்கூடாது என்பதற்காக சம்மந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தேர்தல் அதிகாரிகளுக்கு அந்த கட்சிகளுக்கு காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பின் தலைமை தேர்தல் அதிகாரியால் நடத்தப்பெறும் விசாரணை வாயிலாக அக்கட்சிகளுக்கு தங்களது விளக்கத்தை; அளிக்கும் வாய்ப்பு அளிக்கப்படும். பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்குவது தொடர்பாக இறுதி முடிவை இந்திய தேர்தல் ஆணையம் எடுக்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
Next Story

