அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு ஆசிரியர்கள், வகுப்பறைகள் கேட்டு அமைச்சரிடம் மனு

X
Komarapalayam King 24x7 |12 July 2025 8:46 PM ISTகுமாரபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்கள், வகுப்பறை கட்டிடங்கள், கழிப்பறை வசதிகள் கேட்டு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் நகரமன்ற தலைவர் கோரிக்கை மனு கொடுத்தார்.
குமாரபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1,700 க்கு மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். குமாரபாளையத்தில் இயங்கி வந்த அரசு உதவி பெறும் மகளிர் பள்ளி இந்த கல்வி ஆண்டு முதல் செயல்படாததே, அரசு பள்ளியில் அதிக மாணவிகள் சேருவதற்கு காரணமாகவும் உள்ளது. மேலும் அதிகரித்துள்ள மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக ஆசிரியர்கள், வகுப்பறை கட்டிடங்கள், கழிப்பறை வசதிகள் இல்லாமல் பள்ளியை நிர்வாகம் செய்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளதால், பள்ளி மாணவிகள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று, குமாரபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களையும், வகுப்பறை கட்டிடங்களையும், கழிப்பறை வசதிகளையும் ஏற்படுத்தக் கோரி, சென்னையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வசம், நகரமன்ற தலைவர் மற்றும் வடக்கு நகர தி.மு.க பொறுப்பாளர் விஜய்கண்ணன், மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் மனு கொடுத்தனர்.
Next Story
