அதிமுக விருதுநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது ...

X
அதிமுக விருதுநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது ... அதிமுக விருதுநகர் மேற்கு மாவட்டம் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருத்தங்கல் பாலாஜி நகரிலுள்ள... விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திரபாலாஜி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.அப்போது கூட்டத்தில் நிர்வாகிகளிடம் பேசிய ராஜேந்திரபாலாஜி சட்டமன்றத் தேர்தல் நெருங்க உள்ள நிலையில் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும் எனவும்,அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் செய்த சாதனைகளையும், விருதுநகர் மாவட்டத்தில் நாம் செய்யும் மக்கள் பணிகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.இந்த கூட்டத்தில் சிவகாசி ,விருதுநகர் ,ராஜபாளையம் , ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

