அதிமுக ஆட்சி அமைந்தால் மீண்டும் தாலிக்கு தங்கம் திட்டம் கொண்டு வரப்படும் முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி பேச்சு..

அதிமுக ஆட்சி அமைந்தால் மீண்டும் தாலிக்கு தங்கம் திட்டம் கொண்டு வரப்படும் முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி பேச்சு..
X
அதிமுக ஆட்சி அமைந்தால் மீண்டும் தாலிக்கு தங்கம் திட்டம் கொண்டு வரப்படும் முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி பேச்சு..
இராசிபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட ஆண்டகளூர்கேட் பகுதி முழுவதும் வீடு வீடாக சென்று துண்டு அதிமுக சார்பில் பிரசுரம்.. சாதாரண கிளைக் கழக செயலாளராக இருந்து இன்றைய தினம் கழகப் பொதுச் செயலாளராக தமிழகத்தின் சிறந்த முதலமைச்சர் ஆக பணியாற்றி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக 2026 ஆம் ஆண்டு மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக வர இருக்கின்ற எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க கடந்த 10 ஆண்டுகால கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நல்ல திட்டங்களை விளக்கியும், கடந்த நான்காண்டு கால விடியா திமுக ஆட்சியின் அவல நிலைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதை பொருட்கள் விற்பனை, பெண்களுக்கு பாதுகாப்பின்மை ஆகியவைகளை விளக்கியும் தயாரிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை மக்கள் மாவட்ட அம்மா பேரவை சார்பில் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட ஆண்டகளூர்கேட் பகுதி முழுவதும் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை விநியோகித்தல் மற்றும் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. வழக்கறிஞரும் நாமக்கல் மாவட்ட அம்மா பேரவை செயலாளருமான இ.ஆர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளரும் நாமக்கல் மாவட்ட கழக செயலாளர் குமாரபாளையம் தொகுதி கழகச் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சரமான பி தங்கமணி கலந்து கொண்டு வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கினார் அப்போது முன்னாள் அமைச்சர் பி தங்கமணி பேசியதாவது இன்றைய தினம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிகழ்வு என்பது எடப்பாடி யார் அவர்களின் ஆணைக்கிணங்க 22 வது வாரமாக ஒவ்வொரு பகுதியாகச் சென்று தெருமுனைப் பிரச்சாரமும் அதே போல் இந்த ஆட்சியில் மக்கள் விரோத ஆட்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் பத்து மாத காலத்தில் தேர்தல் நடைபெற இருக்கின்றது. தமிழகத்தில் மக்களின் ஆட்சியாக மக்கள் முதல்வராக மீண்டும் எடப்பாடியார் வர வேண்டும் என்பதற்காக தொடர்ந்து 52 வாரங்கள் துண்டு பிரசுரங்கள் வழங்குகின்ற நிகழ்வும் தெருமுனைப் பிரச்சாரமும் வழங்குகின்ற நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது அந்த வகையில் 22 ஆவது வாரமாக இன்றைய தினம் இராசிபுரம் ஒன்றியம் ஆண்டகளூர்கேட் பகுதியில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இன்றைய தினம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற கூட்டம் என்பது நான்காண்டு காலம் அம்மா அவர்கள் கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் நிறுத்திய அரசுதான் இந்த திமுக அரசு மக்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கின்றோம் என்று சொல்லி 27 மாதங்கள் கழித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தியதற்கு பின்னால் அதுவும் தகுதியானவர்களுக்கு என்று ஆயிரம் ரூபாய் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் அதுவும் நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற பொழுதுதான் கொடுத்தார்கள் இல்லை என்றால் இன்னும் காலதாமதம் செய்திருப்பார்கள். இப்பொழுது சட்டமன்றத் தேர்தல் வர இருக்கின்ற காரணத்தினால் நாங்கள் விடுபட்டவர்களுக்கு கொடுக்கின்றோம் என்று சொல்லி வருகின்ற 15-ம் தேதியில் இருந்து மீண்டும் கணக்கெடுத்து முடிப்பதற்குள் இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிடும் தேர்தலுக்கு வருகின்ற பொழுது ஒரு நான்கு மாதங்கள் கொடுப்பார்கள் வாக்குகளை பெறுவதற்காக மாண்புமிகு அம்மா அவர்கள் இருக்கின்ற பொழுது ஒரு திட்டம் என்று சொன்னால் குடும்பத்தில் இருக்கின்ற அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்பதற்குதான் அம்மா அவர்கள் 2011 ஆம் ஆண்டு எந்த ஒரு திட்டம் கொண்டு வந்தாலும் மிக்சி, கிரைண்டர், பேனாக இருந்தாலும் சரி தாலிக்கு தங்கம் திட்டமாக இருந்தாலும் சரி இன்றைய தினம் மின்கட்டணம் உயர்ந்து கொண்டே இருக்கிறது நூறு யூனிட் மின்சாரம் இந்தியாவிற்கே ஒரு முன்னோடி திட்டமாக அம்மா அவர்கள் கொடுத்ததின் காரணமாக இன்று பாதி குடும்பங்கள் மின்கட்டணம் கட்டாமல் இருக்கின்றார்கள் என்று சொன்னால் ஒரு திட்டத்தை அறிவித்தால் அனைவருக்குமே பயன்படுகின்ற வகையில் இருக்க வேண்டும் ஆனால் ஸ்டாலின் அவர்கள் வாக்குகளை பெறுவதற்காக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்ததுக்கு பின்னால் ஆயிரம் ரூபாயை பாதி பேருக்கு மட்டும் கொடுத்து மீதி பேருக்கு ஏமாற்றி விட்டார்கள். அதேபோல பொங்கல் பரிசு கடந்த ஆண்டு கொடுக்கவில்லை சட்டமன்றத்தில் நாங்கள் கேட்டோம் வருடா வருடம் அம்மா இருக்கின்ற காலத்தில் இருந்து எடப்பாடியார் இருக்கின்ற பொழுது கொரோனா காலம் என்பதால் 2500 ரூபாய் கொடுத்தார்கள் நீங்கள் முதல் ஆண்டு பணம் கொடுக்கவில்லை. வெறும் பொங்கல் பரிசை மட்டும் கொடுத்தீர்கள் வெல்லமெல்லாம் எந்த அளவுக்கு போய்விட்டது என்று உங்களுக்கு தெரியும். அடுத்த ஆண்டு ஆயிரம் ரூபாய் மற்றும் அரிசி மட்டும் கொடுத்தார்கள் போன ஆண்டு அதுவும் கொடுக்கவில்லை ஏனென்று நாங்கள் கேட்டால் இந்த ஆண்டு தேர்தலில் இல்லை அடுத்த ஆண்டு தேர்தலில் வரும் பொழுது சேர்த்தி கொடுப்போம் என்று சொல்லி வாக்களித்த மக்களைப் பற்றி கவலைப்படாமல் வாக்குகளை பெறுவதற்கு மட்டும் அந்தத் திட்டத்தை கொண்டு வருகிறார்கள் என்று சொன்னால் தொடர்ந்து பொங்கல் பரிசு வழங்கிய அரசு அம்மா அவர்களின் அரசு எடப்பாடியார் அவர்களின் அரசு சிறப்பாக பொங்கல் பண்டகையை கொண்டாட வேண்டும் என்பதற்காக இன்று தங்கம் என்பது 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிக் கொண்டிருக்கிறது ஒரு வீட்டில் பெண்ணுக்கு திருமணம் என்று சொன்னால் அந்த பெண்ணுக்கு தாலிக்கு தங்கம் போட்டு அனுப்ப வேண்டும் அதுதான் தமிழினர் பாரம்பரியம் அதை அம்மா அவர்கள் புரிந்த காரணத்தினால் தான் தாலிக்கு தங்கம் என்கின்ற திட்டத்தை கொண்டு வந்து பத்தாண்டு காலத்தில் 13 லட்சம் பேருக்கு அந்தத் திட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்தார்கள் இப்பொழுது அம்மா அவர்கள் கொண்டு வந்த என்ற காரணத்திற்காக அந்தத் திட்டத்தை நிறுத்தி விட்டார்கள் கேட்டால் என்ன சொல்கிறார்கள் என்று சொன்னால் கல்லூரியில் படிப்பவர்களுக்கு நாங்கள் ஆயிரம் ரூபாய் கொடுக்கின்றோம். ஆகையால் இந்த திட்டம் தேவையில்லை என்று சொல்கிறார்கள் கொடுக்கட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை மூன்றாண்டு காலம் படித்தால் 36 ஆயிரம் ரூபாய் தான். அதுவும் அவர்களுக்கு கல்லூரியில் ஏதாவது செலவு இருந்தால் அதையும் செய்து விடுவார்கள். மீண்டும் அம்மாவின் ஆட்சி எடப்பாடியாரின் ஆட்சி அமைந்தால்தான் இந்த தாலிக்கு தங்கம் திட்டம் உங்களுக்கு தொடர்ந்து கிடைக்கும் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. அதேபோல லேப்டாப் திட்டம் கிட்டத்தட்ட 10 ஆண்டு காலத்தில் 52 லட்சம் மாணவ மாணவிகளுக்கு 15000 மதிப்புள்ள லேப்டாப்பை கொடுத்தார்கள் அம்மா அவர்கள் கொண்டு வந்தார்கள் என்ற காரணத்திற்காக ஏழை மாணவர்கள் எல்லாம் கல்லூரியில் சேர வேண்டும் என்று சொன்னால் இன்றைய கம்ப்யூட்டர் வளர்ந்து கொண்டிருக்கின்ற காலம் கம்ப்யூட்டர் அறிவு இல்லை என்று சொன்னால் மேற்படிப்பு படிக்க முடியாது என்ற காரணத்திற்காக அந்த லேப்டாப் என்பது மிக முக்கியம் அதை நான் தருகிறேன் என்று அம்மா அவர்கள் ஆரம்பித்து அண்ணன் எடப்பாடி யார் 52 லட்சம் பேருக்கு கொடுத்தார்கள் இந்த நான்கு ஆண்டு காலமாக அந்த லேப்டாப் திட்டத்தை நிறுத்தி விட்டார்கள். கேட்டால் அதற்கு ஏதோ ஒரு பதிலை சொல்லி விடுகிறார்கள் இப்பொழுது தேர்தல் வருகின்றது என்பதற்காக லேப்டாப்பை தருகிறோம் என்று சொல்கிறார்கள் ஆக மக்களுக்கான அரசு எது என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் தேர்தலின் போது உங்களை நாடி உங்களுக்கு ஏதாவது ஒரு திட்டத்தை கொடுத்துவிட்டு வாக்குகளை பெற்று நான்காண்டு காலம் ஏமாற்றிய அரசு இந்த திமுக அரசு. கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றித் தருகின்ற அரசு அம்மாவின் அரசு அண்ணன் எடப்பாடி யாரின் அரசு என்பதை மட்டும் நீங்கள் மறந்துவிடக்கூடாது ஏன் என்று சொன்னால் இன்னும் ஏழு, எட்டு மாத காலத்தில் தேர்தல் வருகின்ற பொழுது தேர்தல் அறிக்கை கொடுப்பார்கள் இன்னும் ஏதாவது உங்களை கவருகின்ற வகையில் ஏதாவது ஒரு புது திட்டத்தை கொடுத்துவிட்டு வாக்குகளை பெற்றதற்கு பின்னால் ஏமாற்றி விட்டுச் செல்வார்கள் ஆனால் அண்ணா திமுகவின் வாக்குறுதி அப்படி கிடையாது எந்த வாக்குறுதி கொடுத்தாலும் முழுமையாக நிறைவேற்றித் தருகின்ற அரசு ஆகையால் மீண்டும் ஒருமுறை ஏமாந்து விடாதீர்கள் என்பதை இந்த நேரத்தில் பெண்களாகிய தாய்மார்களுக்கு இந்த நேரத்தில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அது மட்டுமல்ல இன்றைய தினம் அம்மா அவர்கள் இருக்கின்ற பொழுதும் அண்ணன் எடப்பாடியார் இருக்கின்ற பொழுதும் எங்கேயும் சட்ட ஒழுங்கு கெடவில்லை தினந்தோறும் 10 கொலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன பாலியல் தொல்லை என்பது இன்று குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத சூழ்நிலை. காரணம் ஆசிரியர்களே கற்பை சூறையாடுகின்ற ஆட்சி தான் திமுக ஆட்சி அப்படி இருக்கின்ற பொழுது எப்படி பெண்களை பள்ளி கல்லூரிகளுக்கு அனுப்ப முடியும் எப்படி பாதுகாப்பு இருக்கும் இந்த நான்காண்டு காலமாக எத்தனை மாணவிகளின் கற்பு சூறையாடப்பட்டிருக்கிறது. எத்தனை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் அம்மா அவர்கள் இருக்கின்ற பொழுதும் அண்ணன் எடப்பாடி யார் இருக்கின்ற பொழுதும் இது போன்ற ஒரு சூழ்நிலை இருந்ததா பயம் இருந்தது ஆட்சியாளர்கள் மீது அவர்களுக்கு பயம் இருந்தது ஏதாவது தவறு செய்தால் நடவடிக்கை எடுத்து விடுவோம் என்று இன்றைய ஆட்சியாளர்களைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லாத காரணத்தினால் தான் தொடர்ந்து இப்படி தவறுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு அடுத்தபடியாக உங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி பத்திரமாக நீங்கள் அழைத்து வர வேண்டும் என்று சொன்னால் அது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சிதான் இன்று கஞ்சா என்பது ஐந்தாம் வகுப்பு படிக்கின்ற மாணவன் பாக்கெட்டில் கஞ்சா பாக்கெட் இருக்கின்ற சூழ்நிலை தமிழகத்தில் உருவாகி விட்டது என்று சொன்னால் தாய்மார்கள் ஆகிய நீங்கள் எல்லாம் வேகாத வெயிலில் கஷ்டப்பட்டு நம்மைப் போன்று நம் குழந்தைகள் கஷ்டப்படக் கூடாது நாளைய தினம் அவர்கள் படித்து ஒரு வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக நீங்கள் பள்ளி கல்லூரிகளுக்கு அனுப்புகிறீர்கள் ஆனால் அந்த மாணவர்கள் நம்முடைய மாணவர்கள் நல்லவர்கள் தான் யாராவது ஒருவருக்கு அந்த பழக்கம் இருக்கும் என்றால் இளம் வயதாக இருக்கின்ற காரணத்தினால் அவர்கள் பழகிவிட்டார்கள் என்று சொன்னால் அவர்களுடைய எதிர்காலமே வீணாகிவிடும் அவர்கள் கொடுக்கின்ற ஆயிரம் ரூபாய்க்கு ஏமாந்தீர்கள் என்று சொன்னால் உங்களுடைய குழந்தைகளின் எதிர்காலமே வீணாகப் போய்விடும் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்த்து வருகின்ற தேர்தலில் வாக்களிக்க வேண்டும் அதேபோல கள்ளச்சாராயம். அம்மாவின் ஆட்சியில் இருந்ததா அண்ணன் எடப்பாடியார் ஆட்சியில் இருந்ததா இன்று இரண்டு முறை கள்ளச்சாராய இறப்பு நடைபெற்று இருக்கின்றது ஒன்று விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 23 பேர் அதேபோல் கள்ளக்குறிச்சியில் 69 பேர் இறந்திருக்கிறார்கள் இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் கொடுத்தார்கள் நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை பாதிக்கப்பட்ட குடும்பம் கொடுக்கட்டும் ஆனால் உழைத்து சம்பாதிக்கின்ற ஏதாவது வேலைக்கு செல்கின்ற பொழுது விபத்து ஏற்பட்டால் ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கின்றார்கள். அப்பொழுது இந்த ஆட்சி யாருக்கான ஆட்சி கள்ளச்சாராயம் குடித்து இருந்தால் 10 லட்சம் ரூபாய் பட்டாசு தொழிற்சாலையில் வேலை செய்து தினந்தோறும் நாம் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கின்றோம் என்று சொன்னால் அந்த ஓராண்டு காலத்திற்குள் அந்த விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் வேலை செய்கின்றவர்கள் மாதத்திற்கு 10 பேர் 20 பேர் இறந்து கொண்டிருக்கிறார்கள். உயிரை பணயம் வைத்து அந்த பட்டாசு தொழிற்சாலையில் வேலை செய்கிறார்கள் அவர்கள் எப்பொழுது உயிரோடு திரும்பி வருவோம் என்று அவர்களுக்கே தெரியாது காலை வேலைக்கு சென்றால் மாலை வீட்டுக்கு வருவோமா என்ற தெரியாத சூழ்நிலையில் அவர்கள் பணியாற்றுகிறார்கள் அப்படி அவர்களுக்கு விபத்து ஏற்பட்டு இருந்தால் அவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் கொடுக்கிறார்கள் நன்றாக யோசித்துப் பாருங்கள் இந்த ஆட்சி யாருக்கான ஆட்சி நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் ஆக இதையெல்லாம் நீங்கள் சிந்தித்து அம்மாவின் திட்டங்கள் எல்லாம் உங்களுக்கு தொடர்ந்து வரவேண்டும் சட்டத்தின் ஆட்சி நடைபெற வேண்டும் உங்கள் கழுத்தில் இருக்கின்ற நகை பத்திரமாக வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று சொன்னால் அது இரட்டை இலை ஆட்சி அண்ணன் எடப்பாடியாரின் ஆட்சி இருந்தால் மட்டும்தான் உங்களுக்கு பாதுகாப்பு என்பதை நான் உங்களுக்கு இந்த நேரத்தில் சொல்லி இது கிராமப் பகுதி 100 நாள் வேலைவாய்ப்பை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 150 நாள் என்று சொன்னார்கள் இன்று 100 நாள் வேலை செய்தவர்களுக்கே மூன்று மாத காலமாக பணம் வரவில்லை அது மட்டுமல்ல கிராம ஊராட்சிகள் எல்லாம் நகராட்சியோடு இணைத்து இனிமேல் 100 நாள் வேலை வாய்ப்பு இல்லை என்ற நிலைமை உருவாக்கி இருக்கின்றார்கள் அதற்காகத்தான் வருகின்ற புதன்கிழமை அன்று ராசிபுரம் எம்ஜிஆர் சிலை அருகில் ஒரு போராட்டம் நடைபெற இருக்கின்றது அண்ணன் எடப்பாடி யார் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு உடனே பணம் வழங்க வேண்டும் கிராம ஊராட்சி கிராம ஊராட்சியாகவே இருக்க வேண்டும் புதிய பேருந்து நிலையம் அப்படியே வைத்திருக்க வேண்டும் அவர்களின் ஆதாயத்திற்காக அணைப்பாளையம் 8 கிலோமீட்டர் தள்ளி அந்த பேருந்து நிலையத்தை கொண்டு செல்ல இருக்கின்றார்கள். ஆகையால் இதையெல்லாம் தடுக்க வேண்டும் என்பதற்காக வருகின்ற புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கின்றது அந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக இந்த அரசுக்கு செவிக்கு காது கேட்டு இந்த திட்டங்களை எல்லாம் கைவிட்டு மக்களுக்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்று சொன்னால் அந்தப் போராட்டம் வெற்றி அடைய வேண்டும் அதேபோல இன்றைய தினம் தெருமுனைப் பிரச்சாரத்திற்கு இந்த அளவுக்கு மக்கள் திரண்டு வந்திருக்கிறார்கள் என்று சொன்னால் இந்த ஆட்சியாளர்கள் மீது எவ்வளவு வெறுப்பு இருக்கின்றது இதுவே ஒரு உதாரணம். வருகின்ற தேர்தலில் நீங்கள் ஏமாந்து விடாதீர்கள் மீண்டும் பொய்யான வாக்குறுதியை கொடுப்பார்கள். இவ்வாறு முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி பேசினார். இந்தத் தெருமுனை பிரச்சாரத்தில் கழக மகளிர் அணி இணைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மருத்துவர் வெ. சரோஜா, மாவட்ட கழக அவைத் தலைவர் எஸ் பி கந்தசாமி, மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் ஆர். பிரகாசம், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணைச் செயலாளர் என்.கே தினகர், இராசிபுரம் ஒன்றிய கழகச் செயலாளர் ஏ.வேம்பு சேகர், நாமக்கல் மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட தலைவர் இ.குமரேசன், வழக்கறினரும் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளருமான கேபிஎஸ் சுரேஷ்குமார், நாமக்கல் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பரணிதரன் உட்பட ஏராளமான கழக நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Next Story