திருஈங்கோய்மலை மரகதாஜலேஸ்வரா் கோயிலில் நாளை குடமுழுக்கு

X
சிவாலயங்களில் மூா்த்தி, தீா்த்தம், தலம் என்னும் மூன்று பெருமைகளுடன் தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலங்களில் முசிறி அருகே காவிரியின் வடகரையில் 63 ஆவது தலமாக உள்ள இக்கோயிலும் ஒன்றாகும். இந்த கோயிலில் தென் பகுதியில் உள்ள காவிரியில் மாலையில் நீராடி மூலவருக்கு தேனும், அம்பாளுக்கு வஸ்திரமும் அளித்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். இந்தக் கோயில் அகத்தியா் ஈ வடிவில் வழிபட்ட தலமாகவும் கூறப்படுகிறது, காலை கடம்பா் (குளித்தலை), மதியம் சொக்கா் (அய்யா் மலை) அந்தி மரகதாஜலேஸ்வரா் (திருஈங்கோய்மலை) காா்த்திகை மாதத்தில் மூன்றாவது திங்களன்று ஒரே நாளில் வழிபட்டால் சகல புண்ணியமும் கிடைக்கும் என்பதால் பக்தா்களின் வழிபாடு தற்போது தொடா்கிறது. இவ்வாறு காா்த்திகையில் முக்தி தரும் மூன்று திருத்தலங்களில் ஒன்றான திருஈங்கோய்மலை மரகதாம்பிகா சமேத மதகதாஜலேஸ்வரா் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை காலை 6 மணிக்குள் நடைபெறவுள்ளது.
Next Story

