மனிதநேய விழிப்புணர்வு பேரணியில் பெண்கள்

மதுரை உசிலம்பட்டியில் மனிதநேய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டி கிராமத்தில் புனித வளனார் சமூக பணி மையம் சார்பில் மனித கடத்தல் மற்றும் மனித நேயம் காத்திடுவோம் என வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நேற்று ( ஜூலை.12)நடைபெற்றது.இதில் புனித வளனார் சமூக பணி மையத்தின் திட்ட இயக்குநர் லூசியா முன்னிலையில் ஊராட்சி செயலாளர்கள்ஜெயராமன் மற்றும் அலெக்ஸ்பாண்டியன் ஆகியோர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த பேரணியானது நக்கலப்பட்டி கிராம மந்தை முன்பு தொடங்கி கிராமத்தில் உள்ள முக்கிய தெருக்களின் வழியாக சென்று பொதுமக்களிடம் மனித கடத்தல், பெண் குழந்தைகளை பாதுகாப்பது, சிறுமி திருமணத்தை தடுப்பது மற்றும் மனித நேயத்தை பாதுகாப்பது குறித்து கையில் பதாகைகளை ஏந்தி பெண்கள் வந்தனர்.
Next Story