கரூர் பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது.
கரூர் பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது. கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் காவல் எல்லைக்குட்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் உதயகுமார்க்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ஜூலை 11ஆம் தேதி இரவு 9:30 மணி அளவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தை சுற்றி ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அருகில் உள்ள ஒரு முள் தோட்டத்தில் பணம் வைத்து சுதாடுவது கண்டறியப்பட்டது. இந்த சூதாட்த்தில் ஈடுபட்ட கரூர் மேட்டு மகாதானபுரம் அர்ஜுன தெருவை சேர்ந்த லோகநாதன், வெங்கமேடு செங்குந்தர் நகர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் ,கரூர் கொளந்தானூர் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய மூவரையும் கைது செய்து அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 அட்டைகளையும் ரூபாய் 200-ஐ பறிமுதல் செய்தனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.
Next Story





