திருவேங்கடம் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் வாரச்சந்தையில் அதிகமான ஆடுகள் விற்பனைக்கு வந்தன. ராஜபாளையம்,சிவகாசி, கோவில்பட்டி, கழுகுமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லோடு ஆட்டோ மூலம் வியாபாரிகள் ஆடுகளை கொண்டு வந்து சந்தை வளாகத்தில் கட்டியிருந்தனர். 10 கிலோ கறி கொண்ட ஆடு ரூ. 8,000 எனவும், 10 கிலோ கறி கொண்ட கிடாய் ரூ.10,000 எனவும் விற்பனை செய்யப்பட்டது. இன்று மட்டும் 500முதல் 1000ஆடுகள் வரை விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. இன்று ஒரே நாள் சுமார் ரூ.7 லட்சம் வரை ஆடு, கிடாய்கள் விற்பனையானது. ஆடுகள் நல்ல விற்பனை செய்யப்பட்டதால் அப்பகுதி உள்ள விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

