கோவையில் குடியிருப்புப் பகுதியில் காட்டுப் பன்றிகள் உலாவல் – பொதுமக்களில் அச்சம்!

கோவை மாநகராட்சி 14வது வார்டு பகுதியில் காட்டுப் பன்றிகள் உலாவும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி, பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாநகராட்சி 14வது வார்டு பகுதியில் காட்டுப் பன்றிகள் உலாவும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி, பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சாய் நகர், வி.கே.எல் நகர், மீனாட்சி கார்டன், வன்னி நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் 7க்கும் மேற்பட்ட காட்டுப் பன்றிகள் நேற்று முன்தினம் அதிகாலை நேரத்தில் வந்தது பதிவாகியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழையால் காட்டுப் பன்றிகள் நீர்வழிப் பாதைகளைப் பயன்படுத்தி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்பகுதியில் காட்டுப் பன்றிகள் தாக்குதல் ஏற்படுமோ என்ற பயத்தில் பொதுமக்கள் உள்ளனர். கடந்த ஆண்டு கூட வார்டு கவுன்சிலர் சித்ரா தங்கவேல் வனத்துறையிடம் புகார் அளித்திருந்தும், நிலைமை தொடரும் நிலையில், அவசர நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Next Story