உத்திரமேரூரில் தார் தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து

உத்திரமேரூரில்  தார் தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து
X
அழிசூர் தார் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா, அழிசூர் கிராமத்தில் களியாம்பூண்டி செல்லும் சாலையில், தனியாருக்கு சொந்தமான தார் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் எதிர்பாராதவிதமாக திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தொழிற்சாலை நிர்வாகத்தினர், உத்திரமேரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த, தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெகதீசன் தலைமையிலான வீரர்கள், தீயை அணைத்தனர். அதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தார் மூலப்பொருட்கள் எரிந்து சேதமானது. பெருநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Next Story