கேட்டை திறந்து பண்ணை வீட்டுக்குள் நுழைந்த ஒற்றை யானை: சி.சி.டி.வி. காட்சி வைரல்!

X
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே ஓணாப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் பண்ணை வீட்டுக்குள் ஒற்றை காட்டு யானை நுழைந்தது. உணவுக்கும் தண்ணீருக்கும் தேடி அலைந்த அந்த யானை, வீட்டு கேட்டை துதி கையால் திறந்து மனிதரைப் போல உள்ளே நுழைந்தது. வீட்டின் சுற்றுபுறங்களில் சுமார் ஒரு மணி நேரம் சுற்றித்திரிந்த பிறகு, அது அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு திரும்பிச் சென்றது. இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் பண்ணை வீட்டில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, அச்சத்தில் இருக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், வனத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

