கோவை: உங்களுடன் ஸ்டாலின் முகாம் - மாவட்ட ஆட்சியர் செய்தியாளர் சந்திப்பு !

கோவை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஜூலை 15 முதல் அக்டோபர் 31 வரை நான்கு கட்டங்களில் நடைபெறுகிறது.
கோவை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஜூலை 15 முதல் அக்டோபர் 31 வரை நான்கு கட்டங்களில் நடைபெறுகிறது. மொத்தம் 334 முகாம்கள் நடைபெற உள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில், நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளை உள்ளடக்கிய வகையில் இந்த முகாம்கள் திட்டமிடப்பட்டுள்ளன. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் நகரை ஒட்டிய ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் பங்களிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. முகாம்களில் பொதுமக்கள் மருத்துவ முகாம், மகளிர் உரிமைத் தொகை, சொத்து வரி மாற்றம், ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக விண்ணப்பிக்கலாம். இ-சேவை மையம் மற்றும் போலீசாரின் “May I Help You” திட்டமும் முகாமில் செயல்படும். மொத்தம் 1694 களப்பணியாளர்கள் மக்களுக்கு உதவ நியமிக்கப்பட்டுள்ளனர். வீடு வீடாக விண்ணப்பங்கள் வழங்கப்படுவதுடன், விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நடத்தப்படுகின்றன. பொதுமக்கள் இந்த முகாம்களை பயன்படுத்தி பயன்பெற மாவட்ட கலெக்டர் பவன் குமார் கேட்டுக்கொண்டார்.
Next Story