ஆற்காட்டில் வாலிபருக்கு கத்திக்குத்து

ஆற்காட்டில் வாலிபருக்கு கத்திக்குத்து
X
ஆற்காட்டில் வாலிபருக்கு கத்திக்குத்து
ஆற்காடு தோப்புக்கானா சடாய்தெரு பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 29). இவர் ஆற்காட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் நேற்று காலை காய்கறிகளை வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் ஆற்காட்டில் இருந்து செய்யாறு செல்லும் புறவழிச்சாலையில் சென்றார். ஆற்காடு டெல்லிகேட் அருகே சென்றபோது பின்னால் ஹெல்மெட் அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் திடீரென பார்த்திபன் இடுப்பு பகுதியில் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்று விட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்திபனை கத்தியால் குத்திய நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? முன்விரோதம் காரணமா? என்பன குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story