கலவை அருகே தீக்காயம் அடைந்த சிறுமி பலி!

கலவை அருகே தீக்காயம் அடைந்த சிறுமி பலி!
X
கலவை அருகே தீக்காயம் அடைந்த சிறுமி பலி!
கலவையை அடுத்த பென்னகர் மேட்டுக்காலனி பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் இளவரசி (வயது 12), அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி இளவரசி அடுப்பில் மண்எண்ணெய் ஊற்றி பற்றவைத்த போது எதிர்பாராதவிதமாக அவரது ஆடையில் தீப்பற்றியது. இதில் தீக்காயம் அடைந்த அவள் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இளவரசி பரிதாபமாக உயிரிழந்தாள். இதுகுறித்த புகாரின் பேரில் வாழைப்பந்தல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
Next Story