பள்ளி மாணவியிடம் நகைகள் மோசடி செய்த தோழி

பள்ளி மாணவியிடம் நகைகள் மோசடி செய்த தோழி
X
இன்ஸ்டா முலம் மோசடி
குமரி மாவட்டம்  குளச்சல் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இரு மாணவிகள் ஒரே பள்ளியில் பிளஸ் 2  படித்து வந்தனர். இதில் ஒரு மாணவி மிகவும் வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்தவர். அவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆர்வம் உடையவராக இருந்தார். குறிப்பாக இன்ஸ்டாவில் அதிக அளவில் சாட்டிங் செய்வார். இவர் அடிக்கடி பெற்றோர் வாங்கி கொடுக்கும் தங்க நகைகளை இன்ஸ்டாவில் பதிவு செய்து வந்துள்ளார். இதை அறிந்த தோழி எப்படியாவது ஏமாற்றி தானும் நகைகளை வாங்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.       இதற்காக இன்ஸ்டாவில் ஒரு ஆண் நண்பர் பெயரில் ஐடி உருவாக்கி மாணவியுடன் சாட்டிங் செய்து வந்துள்ளார். எதிரே சாட்டிங் செய்வது தனது பள்ளி தோழிதான் என்பது தெரியாமல் அந்த மாணவி ஆண் நண்பர் என நினைத்து சார்ட்டிங் செய்து நாளடைவில் அந்த நண்பரை காதலிக்வும் தொடங்கியுள்ளார்.        இதை சாதகமாக பயன்படுத்திய அந்தப் பெண் ஆண் நண்பர் பெயரில் நகை வாங்கினார்.     இந்த நிலையில் மாணவியின் தாயார் கடந்த வாரம் திருமணம் நிகழ்ச்சிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்த நகை பெட்டியை பார்த்தபோது நகைகள் ஏராளம் மாயமாகி இருந்தது  கண்டுபிடிக்கப்பட்டது.       பின்னர் விவகாரம் குளச்சல் காவல் நிலையத்திற்கு சென்றது. போலீசார் மாணவி சாட்டிங் செய்த முகவரியை வைத்து விசாரித்த போது தான், மோசடிகள் அம்பலமானது. இந்த தகவல் காட்டு தீ போல் அந்த கிராமம் முழுவதும் பரவியது. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பள்ளி தோழியை இப்படி ஏமாற்றி நகையை வாங்கி அடகு வைத்து உள்ளீர்களே எனக் கேட்க  தொடங்கினர். இதனால் அவமானம் தாங்காமல் நேற்று முன்தினம் பள்ளி மாணவி தோழி மற்றும் தாயார் இருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். அக்கம் பக்கத்தினர்  அவர்களை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாயும் மகளும் விஷம் குடித்ததால் தற்போது விசாரணை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் இருந்து வெளிவந்தபின் மீண்டும் விசாரிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
Next Story