உத்திரமேரூர் அருகே ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் காக்கநல்லூர் கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் கிராம பொதுமக்கள் ஒத்துழைப்புடன் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பெரிய கோவிலாக எழுப்பி கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி, லட்சுமி நாராயண பெருமாள், ஆழ்வார், ஆஞ்சநேயர் சுவாமி சிலைகள் புதிதாக பிரதிஷ்டை செய்து இன்று கும்பாபிஷேகம் விழா விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம், அக்னி பிரதிஷ்டை, சாந்தி ஹோமம்,கோ பூஜை, புர்ணாஹூதி உள்ளிட்ட யாக கால பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் தலைமையில் யாக சாலையில் இருந்து கடம் புறப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்து விமான கோபுர கலசத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீர் சிவாச்சாரியார்கள் ஊற்றி தீபாராதனைகள் காண்பித்து கும்பாபிஷேக விழாவை விமர்சையாக நடத்தி வைத்தனர். தொடர்ந்து, பக்தர்கள் மேல் புனித நீர் தெளித்து அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் உத்திரமேரூர் திமுக எம்எல்ஏ சுந்தர், அதிமுக உத்திரமேரூர் முன்னாள் எம் எல் ஏ வாலாஜாபாத் பா கணேசன் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story




