கண்ட சாஸ்தா கோவிலில் கும்பிஷேகம் நடந்தது

கண்ட சாஸ்தா கோவிலில்  கும்பிஷேகம் நடந்தது
X
அதங்கோடு
குமரி மாவட்டத்தில் பழமை வாய்ந்த புகழ் பெற்ற அதங்கோடு கறச்சிவிளை ஶ்ரீ கண்ட சாஸ்தா கோவிலில் 14 வருடங்களுக்கு பின் இன்று அஷ்டபந்தன மஹா கும்பிஷேகம்   வெகு விமரிசையாக நடைபெற்றது.  முன்னதாக கடந்த 7 தேதி முதல் 12 ம் தேதி வரை காலை மாலை என நடை  நடைத்திறக்கப்பட்டு,  கணபதி ஹோமம், தேவ பிரசன்ன பரிகார பூஜைகள், கலசபிசேகத்துடன் உச்ச பூஜைகள் என கும்பாபிஷேக  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது,  இன்று காலை நடை திறக்கப்பட்டு மேள தாளம் முழங்க  முன்னதாக   தெய்வங்கள் கோவில்களில் கும்பாபிசேகம் நிகழ்ந்தன. அதனை தொடர்ந்து  பூஜிக்கப்பட்ட நீரை கண்ட சாஸ்தா கோவில் கோபுரத்தில் அமைப்பட்ட மூன்று கும்பத்தில் ஊற்றி கும்பாபிசேகம் நடத்தினர். தொடர்ந்து சிறப்பு பூஜையும், தீபாராதனையும் , அதனை தொடர்ந்து கும்பாபிஷேக வாழ்தரங்கம் நடைபெற்றது.         கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story