இந்திய தொழிற்சங்க மையத்தின் தெருமுனை கூட்டம் 

இந்திய தொழிற்சங்க மையத்தின் தெருமுனை கூட்டம் 
X
கன்னியாகுமரி
இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் தெருமுனை கூட்டம் திங்கள்நகரில் நடந்தது. காமராஜர் பஸ் நிலையம் முன்பு நடந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜபர்சன் ராஜா தலைமை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் அல்காலித், மணவை கண்ணன் உட்பட பலர் பேசினார்கள். கூட்டத்தில் தொழிலாளர் விரோத சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், குமரி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள இங்கிலாந்து அருள் சகோதரிகள் ஆராதித்த  தேவாலயத்தை தமிழக அரசு திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Next Story