ராசிபுரம் சௌராஷ்ட்ரா , தியாகராஜ சுவாமி கோவில் தெருவில் சுற்று பொங்கல் விழா அமைச்சர் பங்கேற்பு...

X
Rasipuram King 24x7 |13 July 2025 6:42 PM ISTராசிபுரம் சௌராஷ்ட்ரா , தியாகராஜ சுவாமி கோவில் தெருவில் சுற்று பொங்கல் விழா அமைச்சர் பங்கேற்பு...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில வாரங்களாக பல்வேறு பகுதிகளில் தெரு பொங்கல் விழா அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் சிறப்பாக நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ராசிபுரம் சௌராஷ்ட்ரா தியாகராஜ சுவாமி கோவில் தெரு பகுதியில் பொங்கல் விழா அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் விழா குழுவினர் சிறப்பாக செய்து இருந்தனர். இந்த பொங்கல் விழாவிற்கு ராசிபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக ஆதி திராவிட நலத்துறை அமைச்சருமான மருத்துவர் மா. மதிவேந்தன் கலந்து கொண்டு சிறப்பித்தார். அமைச்சருக்கு விழா குழுவினர் சால்வை அணிவித்து மேள தாளங்கள் உடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.. இந்த விழா நிகழ்வில் ராசிபுரம் திமுக நகர கழக செயலாளர் என்.ஆர்.சங்கர், மற்றும் விழா குழுவினர் பலர் கலந்து கொண்டனர்..
Next Story
