தண்ணீர் திறந்து விடும் போது மயங்கி விழுந்து இறந்த நகராட்சி பணியாளர்

X
Komarapalayam King 24x7 |13 July 2025 7:13 PM ISTகுமாரபாளையத்தில் தண்ணீர் திறந்து விடும் போது நகராட்சி பணியாளர் மயங்கி விழுந்து இறந்தார்.
குமாரபாளையம் ராஜாஜி குப்பம் பகுதியில் வசிப்பவர் சரவணன், 58. குமாரபாளையம் நகராட்சியில் தண்ணீர் திறந்து விடும் பணி செய்து வந்தார். இவர் தினமும் இரவு தண்ணீர் திறந்து விடும் பணிக்கு சென்று விட்டு, மறுநாள் காலைதான் வீட்டிற்கு வருவார் என கூறப்படுகிறது. நேற்று காலை, குமாரபாளையம் அரசு பி.எட். கல்லூரி அருகே உள்ள வாட்டர் டேங்க் பகுதியில் தண்ணீர் திறந்து விடும் வேலை செய்து கொண்டிருக்கும் போது, மயங்கி விழுந்தார். இது குறித்து இவரது குடும்பத்தாருக்கு தகவல்; தர, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இவரை பரிசோதித்த டாக்டர், இவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறினார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story
