கல்லாத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி கொலுசு திருடியவர் கைது

X
அரியலூர், ஜூலை.14- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து கல்லாத்தூர் மாங்கொட்டை தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணாமூர்த்தி மனைவி நந்தினி (33)இவர் சொந்த பணியின் காரணமாக வெளியூர் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி உள்ளார் அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது சாமி பூஜை அறை கபோர்ட்டில் வைத்திருந்த பத்தாயிரம் மதிப்புள்ள ஒரு ஜோடி கொலுசு திருடு போயிருந்தது தெரியவந்தது இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் நந்தினி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையில் வானதிரையன் பட்டினம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் கார்த்திக் என்பவர் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கார்த்திகை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story

